Thursday, August 19, 2010

காதில் ஈ எறும்பு



வீட்டருகே தானாக முளைத்து கிடக்கும் குப்பைமேனி எனும் செடியின் இலைச் சாற்றினை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட ஈ அல்லது எறும்பு உடனே வெளிவரும் அல்லது இறந்து போகும். சுத்தமான நீரில் சிறிது உப்பு சேர்த்து உப்பு நீராக்கி அதை மூன்று அல்லது ஐந்து துளி காதில் விட உடன் பலன் கிடைக்கும்.
VERY IMPORTANT AND INTERESTING Read carefully WHEN A THIEF FORCES YOU TO TAKE MONEY FROM THE ATM, DO NOT ARGUE OR RESIST, YOU MIGHT NOT KNOW WHAT HE OR SHE MIGHT DO TO YOU. WHAT YOU SHOULD DO IS TO PUNCH YOUR PIN IN THE REVERSE, I..E IF YOUR PIN IS 1254, YOU PUNCH 4521. THE MOMENT YOU PUNCH IN THE REVERSE, THE MONEY WILL COME OUT BUT WILL BE STUCK INTO THE MACHINE HALF WAY OUT AND IT WILL ALERT THE POLICE WITHOUT THE NOTICE OF THE THIEF. EVERY ATM HAS IT; IT IS SPECIALLY MADE TO SIGNIFY DANGER AND HELP. NOT EVERYONE IS AWARE OF THIS. FORWARD THIS TO ALL YOUR FRIENDS AND THOSE YOU CARE

Monday, December 1, 2008

மனிதனை மிஞ்சிய இயற்கை


 மன்னர்கள் தங்கள் ஆட்சி அலுவல் பணிக்காகவும், தானி யங்கள், பொற்செல்வங் களை பாதுகாக்கவும், படை வீரர்களை நிறுத்தவும் கோட்டைகளையும், அரண்மனைகளையும் கலை நயத்துடன் கட்டினர். ஆனால், மனிதர் களை விட இயற்கைக்கு கலைநயம் அதிகம் என்பதற்கு சேலம் மாவட்டம், வாழப் பாடியை அடுத்த வெள்ளாளகுண்டம் கணவாய்மேடு அருகே உள்ள ஒரு மலை குன்று உதாரணம். மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த குன்றின் உச்சியில் மிகச் சிறந்த சிற்பிகள் செதுக்கி வைத்ததை போல் ஆங்காங்கே கோபுரங்கள் போலவும், மலையை சுற்றி மதில் சுவர்கள் போலவும் பாறைகள் காட்சியளிக்கின்றன. இயற்கையாகவே அமைந்துள்ள ராட்சத பாறைகள் கோட்டை வடிவத்தை அப்படியே கண்முன் நிறுத்துகின்றன. தூரத்தில் இருந்து பார்க்கும் போது குன்றின் உச்சியில் ஒரு கலைநயம் மிக்க மலைக்கோட்டை உள்ளது போல காணப்படுகிறது. இந்த அற்புத காட்சியை, அந்த வழியாக செல்லும் மக்கள் பார்த்து அதிசயிக்கின்றனர்.

Thursday, November 6, 2008

GULF COUNTRY

அரபு நாடைப்பற்றி சொல்ல வேண்டுமானால்…..
கெட்டுபோவதும் எளிது, திருந்தி வாழ்வதும் ரெம்ப எளிது, இங்கே உள்ள சூழ்னிலை ரெண்டுக்குமே ஏற்றதாக்ச் உள்ளது
நல்ல விஷயங்களும் [இறை பக்தி போன்றவை] நம்மை தேடி வரும், கெட்ட விஷயங்களும் 4கால் பாய்ச்சலில் வரும்
நீங்க எந்த கம்பனிக்கு வருகிறீர்கள் என்று எனக்கு தெரியாது, நீங்கள் வருவது நல்ல ஸ்டான்டர்டான கம்பெனியென்றால் பிரச்சனைஇல்லை
நல்ல வருமானம் வாழ்க்கைதரம் எல்லாமெ கிடைக்கும், இங்கே திருட்டு பயம், வழிப்பறி இதெல்லாம் எதுவும் கிடையாது
ரெம்ப ரெம்ப சுதந்திரம், நாம் எப்படி வாழவேண்டுமானாலும் அதற்கு இங்கே உள்ள சூழ்னிலை ஒத்துழைக்கும்
எனெவே கெட்டுபோவதும் எளிது. நாமதான் நம்மை கட்டுபடுத்திகொள்ளவேண்டும் இங்கே உள்ள சட்டதிட்டங்கள் எதுவும் நம்மை திருத்தாது
கடுமையான் சட்டங்கள் எதும் இருப்பதாக தெரியவில்லை.போக்குவரத்து ரெம்ப ரெம்ப ரெம்ப மோஷம் மிக அதிகமாக இருந்தாலும்
அவசரத்துக்கு டாக்ஸி கிடைக்காது, நிக்காமலே போய்விடவார்கள், அரசாங்க பேருந்தும் அடிக்கடி நிக்காமல் போகும்
வெயில்லானாலும் மழையானலும் அதிகமதான் இருக்கும் ஒரு டீ 1DH, Break fast3dhs, lunch12.dhs
ACCOMANDATION ரெம்ப ரெம்ப costly, room கிடைப்பது கஷ்டம் இதுக்குகாகவே எனக்கு தெரிந்த குறைந்த அளவு
சம்பளம் வாங்கிய ஒருவர் வேலைய விட்டு சென்ற சம்பவமெல்லாம் நடந்துள்ளது
எனவே நல்லா ஒரு பேச்சுலர் நல்லா வசதியா தங்க வேண்டுமானால் மாதம் குறந்தது 1000dhs வாடகை கொடுக்க வேண்டும்.
நார்மலா தங்கவேண்டுமானால் 650dhs சும்ம படுத்த எழுந்தால் போதும் என்றால் 350dhs
ஒரு குடும்பம் தங்க வேண்டுமானால் 3500dhsக்கு தயாராக வேண்டும்
சார்ஜாவில் வாடகை கொஞ்சம் குறைவு, அஜ்மான்ல அதைவிட குறைவு, அபுதாபியி அல்-அய்ன் அதைவிட குறைவு
நல்ல சாப்பாட்டிற்கு ஒரு நாளைக்கு 25dhs. ரூமில் இருக்கும்போது குடிதன்னீர் விலைக்குதான் வாங்குகிறார்கள்.
மாதம் ஒரு ஆளுக்கு 25dhs. சலவை ரூம் வசதிய பொறுத்து வாஷிங்மெசின் வாங்கலாம்
கையால் துவைக்காலாம், லாண்டரிடயும் எராளம் உள்ளது. ஒரு பேண்ட்2dhs, Telephone card 25dhs 13mins to india, for local call 0.3dhs/min
ஒரு நல்ல சட்டை 40dhs, pant-65dhs, பெரும்பாலும் யாரும் துனி எடுத்து தைப்பதில்லை. hair cut&shave 15dhs to 20dhs.
shoe55 or 60dhs, shocks dhs, bath soap 3dhs hair oil 5 or 6dhs
கோயில் இருக்கு, சர்ச் இருக்கு நான் இந்த இர்ண்டையும் உள்ளே போய் பார்த்ததில்லை. TRAFFIC ரெம்ப அதிகம்.
[traffic means dubai] ஆபிஸ் போகும் நேரம்&ஆபிஸ் முடிந்து வரும் நேரம் தவிர மற்ற நேரங்களில் NO TRAFFIC.
வண்டிய எடுத்துட்டா அடுத்து பார்கிங்க் கிடைக்காது அது ஒரு பெரிய பிரச்சனை. 2%தான் டூ வீலர் மற்றபடி கார்தான் ஓடுது
பார்கிங் ஒரு மனி நேரம் gov parking 2dhs, private 5dhs.
சினிமா 30DHS முக்கியமான் தமிழ் படமெல்லாம் இங்கே ரிலீஸ் ஆகிவிடும். வெள்ளி அல்லது சனி, வியாழன் அல்லது வெள்ளி 1/2 day.
தமிழ் வார இதழ் குறிப்பிட்ட சில இடங்களில் கிடைக்கும், ஆங்காங்கே தமிழ் நாட்டு உனவு விடுதிகள், அனைத்து இடங்களிலும் கேரள உனவு விடுதிகள்.
self cooking also possible. தமிழ்நாடு உட்பட இந்தியாவில் கிடைக்கும் அனைத்து பொருள்களும் இங்கேயும் கிட்டும். ஒரு பீர் 5dhs, oru hot 20or25
எனக்கு அந்த பழக்கம் கிடையாது இருப்பினும் களவையும் கற்று,மற என்பார்கள், அது சரியா தவறா என்று தெரியாது
வேற என்ன……………………… வேற கேளுங்க சொல்றேன்
அன்புடன்

MADURAI MAHAL


சில நாட்களுக்கு முன்பு, மதுரையின் நடுவே உள்ள திருமலை நாயக்கர் மஹாலுக்கு சென்றிருந்த போது எடுத்த புகைப்படங்கள். மஹாலுக்கும் சுற்றியுள்ள சுழலுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை.



மதுரையை (நேரடியாக) ஆண்ட திருமலை நாயக்கரால், கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது, இந்த பிரமாண்ட தூண் மாளிகை.



இப்போது இருக்கும் இந்த பிரமாண்டமே, ஒரு மிச்சம்தான். முன்பு ராஜா வாழும்போது இருந்தது, இப்போது இருப்பதை விட நான்கு மடங்கு பெரியது.



திராவிட, ஐரோப்பிய மற்றும் முகாலய பாணியில் அமைந்த கட்டிடக்கலை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, மதுரையில் குளோபலைசேஷன்.

 . பம்பாய், இருவர், குரு நேருக்கு நேர், பீமா போன்ற பல படங்களில் நடித்துள்ளது



இது போல வேறெங்கும் 248 பெரிய தூண்களுடன் கூடிய அரண்மனை, இந்தியாவில் கிடையாது.



ஏகப்பட்ட வளைவு அலங்காரங்கள் இருந்தாலும், அந்த காலத்தில் மரமோ, இரும்போ உபயோகப்படுத்தாமல், செங்கலுடன் சுண்ணாம்பையும் கரும்பு சாறையும் மட்டுமே பயன்படுத்தி கட்டியுள்ளார்கள்.



கொஞ்சம் பெருசாத்தான் இருக்கும் போல!!!

Thursday, September 11, 2008

சகாயவிலையில் SIP கால்கள்

ay, September 10, 2008

சகாயவிலையில் SIP கால்கள்

இப்பொழுதும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு கால் செய்ய இன்டியாக்கால்" இன்னும் அநியாய கட்டணமே வசூலித்துக் கொண்டிருக் கின்றார்கள். நிமிடத்திற்கு 7.9¢.அதுவும் ஒவ்வொரு முறையும் ஐ.எஸ்.டி முழுநம்பரையும் நாம் டைப் செய்ய வேண்டும்.

டெல்லை பற்றி கேள்விப்பட்டவுடன் பின்பு அதற்கு தாவலானேன். இவர்கள் நிமிடத்திற்கு 5.6¢ வசூலிக்கின்றார்கள். ஒவ்வொரு இந்திய நம்பருக்கும் ஒரு அமெரிக்க லோக்கல் போன் நம்பரை இவர்கள் நியமித்து நமக்கு தந்து விடுவதால் போன் Contacts-யிலிருந்து நேரடியாகவே அந்த லோக்கல் நம்பர் டையல் செய்து இந்தியா பேசலாம்.இப்படி சமீபத்தில் டெல்லி நண்பன் ஒருவனையும் துபாய் நண்பன் ஒருவனையும் Conference call-ல் இழுத்து ரொம்பநேரம் பேசிக்கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை.

ஆனால் அயல்நாட்டிலும் இந்தியாவிலும் அகலப்பட்டை இணைய இணைப்புகள் வைத்திருபவர்களுக்கு கொண்டாட்டம் தான். விடிய விடிய நயா பைசா செலவில்லாமல் கதைத்துக்கொண்டே இருக்க முடியும். இன்றைய நிலையில் இந்தியாவில் நகர்ப்புறங்களில் மட்டுமே அகலப்பட்டை வசதிகள் உள்ளன. நகரத்தை விட்டு தூரச்செல்லச் செல்ல அகலப்பட்டை கிடைப்பது அரிதாயிருக்கின்றது.

இது போன்று புறநகரின் ஒரு மூலையில் இணைய இணைப்பின்றி மாட்டிக்கொண்டோரிடம் பேசவும் ஒரு விஓஐபி(VOIP) தீர்வு இருக்கின்றது. உங்களுக்கு தேவை இங்கு அக்கரை சீமையில் இன்டர்நெட் டேட்டா பிளானுடன் கூடிய ஒரு நல்ல WiFi கைப்பேசியும் அதில் fring அல்லது Gizmo போன்றதொரு VOIP மென்பொருளும். Callcentric போன்ற ஏதாவதொரு சகாயவிலை SIP சேவை தருபவர்களிடம் ஒரு கணக்கு ஆரம்பித்து அவர்கள் கொடுக்கும் செட்டிங்குகளை அந்த மென்பொருளில் செய்துவிட்டால் நிமிடத்திற்கு $0.0715 கட்டணத்தில் இந்திய தரை தொலைபேசிகளுக்கும் நிமிடத்திற்கு $0.0649 கட்டணத்தில் இந்திய கைபேசிகளுக்கும் நாம் பேசலாம்.

உங்கள் போன் மாடலுக்குத் தகுந்த fring அல்லது Gizmo மென்பொருளை இறக்கம் செய்து உங்கள் கைப்பேசியில் நிறுவவேண்டும். Callcentric தரும் SIP Proxy settings-களையும் இன்னபிற செட்டிங்குகளையும் சரியாய் அதில் குறிக்க வேண்டும். அப்புறமென்ன இன்னும் சீப்பாக நம் கிராமங்களுக்கும் நாம் பேசலாம்.

சீக்கிரத்தில் நம் ஊர்புறங்களுக்கும் கூட இந்த இணையம் வரும். அப்பொழுது உலகம் கணக்குவழக்கின்றி இன்னும் சுருங்கிப் போயிருக்கும்.

Wednesday, September 10, 2008

இனி புத்தகங்களுக்கு குட் பை!!

இனி புத்தகங்களுக்கு குட் பை!!

சோனி (Sony) அவ்வப்போது அட்டகாசமான கருவிகளோடு மார்க்கெட்டில் வருவது அவர்கள் பொழுதுபோக்கு. தனக்கே உரித்தான நவீன தொழில்நுட்பங்கள், தரம் என அசத்திவருவது உலகறியும். இப்போது இன்னொரு புரட்சிபடைக்கும் பெட்டியோடு வந்திருக்கிறார்கள். Sony Reader ஈ புக் ரீடர்.ஈ புத்தகங்களை படிப்பது முன்னெப்போதும் இல்லாதபடி இனி மிக எளிதாகப் போகின்றது. இன்றைய நிலையில் இந்த மென் புத்தகங்களை (E books) படிக்க மேஜை கணிணி அல்லது மடிக்கணிணியில் உட்கார்ந்து படிக்க வேண்டும்.அது boot ஆகி அப் ஆகி படிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.மேலும் 8 மணி நேர வேலை போக படிக்கவும் கணிணியா-..னு வெறுப்பு வேறு. இதோ ஒரு கையடக்க கருவி சாதாரண காகித புத்தகம் போல மென்,மின் புத்தகங்களை படிக்க உதவுகின்றது.பஸ்ஸில் ஏறி பட்டென திறந்து படிக்கத் தொடங்கிவிடலாம்.7,500 பக்கங்களை இன்னொரு முறை ரீசார்ஜ் செய்யாமல் முழுதுமாய் படித்து விடலாமாம்.மேலும் ஒரு நூலக புத்தகங்களை இதில் உள்ள டிஸ்கில் சேமித்து வைத்துகொள்ளலாம். சாதாரண புத்தகம் போலவே பக்கங்களை புரட்டி புரட்டி படிக்கவேண்டுமாம்.முக்கியமாய் இது கணிணி மானிட்டர் போல் CRT-யோ அல்லது மடிக்கணிணி போல் LCD technology-யோ பயன்படுத்தாமல் e Ink-னு ஒரு
நுட்பம் பயன்படுத்துவதால் கண்ணுக்கு இது காகிதத்தில் படிப்பது போலவே தோன்றுமாம்.நாம் படித்துக் கொண்டிருக்கும் போது அது துளி கூட மின்சாரம் பயன்படுத்தாது என்பது இன்னொரு ஆச்சர்ய விஷயம்.ஓ மறந்துட்டேன் MP3 பாடல்களையும் இது கொள்வதால் இனிய இசை கேட்டுக்கொண்டே படிக்கலாமாம் போங்கள்.காகித நாவல்களை சுமப்பது போய் இனி இந்த சிலேட்டை அனைவரும் சுமந்து கொண்டு திரிவதை சீக்கிரத்தில் பார்க்கலாம்.