Monday, December 1, 2008

மனிதனை மிஞ்சிய இயற்கை


 மன்னர்கள் தங்கள் ஆட்சி அலுவல் பணிக்காகவும், தானி யங்கள், பொற்செல்வங் களை பாதுகாக்கவும், படை வீரர்களை நிறுத்தவும் கோட்டைகளையும், அரண்மனைகளையும் கலை நயத்துடன் கட்டினர். ஆனால், மனிதர் களை விட இயற்கைக்கு கலைநயம் அதிகம் என்பதற்கு சேலம் மாவட்டம், வாழப் பாடியை அடுத்த வெள்ளாளகுண்டம் கணவாய்மேடு அருகே உள்ள ஒரு மலை குன்று உதாரணம். மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த குன்றின் உச்சியில் மிகச் சிறந்த சிற்பிகள் செதுக்கி வைத்ததை போல் ஆங்காங்கே கோபுரங்கள் போலவும், மலையை சுற்றி மதில் சுவர்கள் போலவும் பாறைகள் காட்சியளிக்கின்றன. இயற்கையாகவே அமைந்துள்ள ராட்சத பாறைகள் கோட்டை வடிவத்தை அப்படியே கண்முன் நிறுத்துகின்றன. தூரத்தில் இருந்து பார்க்கும் போது குன்றின் உச்சியில் ஒரு கலைநயம் மிக்க மலைக்கோட்டை உள்ளது போல காணப்படுகிறது. இந்த அற்புத காட்சியை, அந்த வழியாக செல்லும் மக்கள் பார்த்து அதிசயிக்கின்றனர்.

1 comment:

S.sampath kumar said...

nice very nice
by mytamilweb.blogspot.com