Monday, June 23, 2008

test

Hello Bavi how are u nan inku nalam nee home work complete panniyacha.

Sunday, June 22, 2008

15 years no leave

ரோடு : பள்ளி, கல்லூரிக்கு 15 ஆண்டுகளாக ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் சாதனை புரிந்த ஈரோட்டை சேர்ந்த கோவை இன்ஜினியரிங் கல்லூரி மாணவியை,அமைச்சர் ராஜா பராட்டினார். ஈரோடு திண்டலை சேர்ந்தவர் சக்திவேல். பாசூர் கனரா வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார். அவருக்கு சரண்யா, நிரஞ்சனா என இரு மகள்கள். மாணவி சரண்யா கோவை அரசு இன்ஜினியரிங் கல்லூரியில், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். அவர், ஆரம்ப பள்ளியில் முதல் வகுப்பில் இருந்து இப்போது கல்லூரி படிப்பு வரை 15 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுப்பே எடுத்ததில்லை என்பதுதான் சாதனை.

ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கோவை அவிலா கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். மேல்நிலை படிப்பை ராசிபுரம் எஸ்.ஆர்.வி., மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளி விடுமுறை நாட்கள் தவிர வேறு விடுப்பு எடுக்கவில்லை. ப்ளஸ் 2 தேர்வில் 1152 மார்க் பெற்றார். மருத்துவக் கல்விக்கு முயற்சித்தார். நுழைவுத்தேர்வில் 0.5 கட் ஆப் மார்க் குறைவாக இருந்ததால், மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இன்ஜினியரிங் கல்லூரியிலும் இதுவரை ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார். அவரது சாதனை குறித்து கேள்விப்பட்ட, மாநில கைத்தறி துறை அமைச்சர் ராஜா, மொடக்குறிச்சி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பழனிச்சாமி ஆகிய இருவரும் மாணவியின் வீட்டுக்கு நேற்று காலை சென்றனர். மாணவியை வெகுவாக பாராட்டினர்.



மாணவி சரண்யா கூறியதாவது : என் தந்தை பணி காரணமாக பல்வேறு மாநிலங்களில் பணி புரிந்தார். இருப்பினும், நான் என் பாட்டி, தாத்தாவுடன் தங்கி படித்தேன். ஆரம்பக் கல்வி கற்கும் போது, விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு செல்ல வேண்டும் என சிந்திக்கும் அளவுக்கு பக்குவம் இல்லை. எனது தாய் தான் என்னை விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அதன் பின் என் தாயின் கனவை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து கல்லூரி மூன்றாம் ஆண்டு வரை, எவ்வளவோ இடர்பாடுகள் வந்த போதும் விடுப்பு எடுக்கவில்லை. என் பாட்டியின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது எனக்கு பிளஸ் 2 தேர்வு நடந்தது. அது குறித்து என் பெற்றோர் என்னிடம் ஏதும் கூறாமல் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு சரண்யா கூறினார்.

23.06.2008 kapil is the great

புதுடில்லி: உலக கோப்பை வென்ற "கபில் டெவில்ஸ்' அணியினர் நேற்று டில்லியில் ஒன்று கூடினர். தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட இவர்கள் மிகவும் உணர்ச்சிமயமாக காணப்பட்டனர். கடந்த 1983ல் இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி கோப்பை வென்றது. இதன் "வெள்ளி விழா' கொண்டாட்டம் ..

Tuesday, October 2, 2007

ஒரு லட்ச ரூபாயில் கார்!

டாடாவின் ஒரு லட்ச ரூபாய் கார் கனவு, இந்தியாவில் பல நடுத்தர குடும்பங்களுக்கு நனவாகப் போகிறது. இந்த கார் எப்படியிருக்கும்? என்ற கற்பனை, கார் வாங்க விரும்புவோருக்குள் இப்போதே சிறகடிக்கத் தொடங்கியிருக்கும். அடிப்படையில் ஒரு மோட்டார் பைக்கில் செய்யக் கூடிய தொழில்நுட்பத்தைக் காட்டிலும் சிறப்பாக இருக்க வேண்டும். காரின் கட்டமைப்பு உறுதியுடனும், நான்குபேர் அமரக் கூடிய வகையிலும் இந்த கார் இருக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. உயர்ந்த சீட்டுகளை அமைத்து, உள்பகுதியில் அதிக இடவசதி இருக்கும். எளிமையாகவும், எளிதாகவும் இருக்க பின் பகுதியில் இன்ஜின் இருக்கும். நகரின் குறுகிய ரோடுகளில் வளைந்து நெளிந்து செல்ல இக்கார் உதவுவதோடு, எரிபொருள் சிக்கனமும் இருக்கும்.இரட்டை சிலிண்டர், 30 பிஎச்பி திறன் வாய்ந்த இன்ஜின் அமைந்திருக்கும். 'சிவிடி' கியர் பாக்ஸ்சுடன் பின் பக்க சக்கரங்கள் இணைக்கப்பட்டிருக்கும். டாடா மோட்டார் நிறுவனம், ஒரு லட்ச ரூபாய் கார் தயாரிக்க அறிவிக்கப்பட்ட நாள் முதலே அதற்கான வடிவமைப்பில் இன்ஜினியர்கள் இறங்கி விட்டனர். எதை, எங்கெங்கு குறைக்கலாம்...உற்பத்தி செலவு எங்கு குறையும், எந்த இடத்தில் சிக்கனத்தை பயன்படுத்தலாம், உறுதி தன்மையை உயர்த்த வேண்டிய பகுதிகள் என அலசி ஆராய்ந்தனர். தொழில்நுட்ப ரீதியாக சிக்கனமும், அதேசமயம் மிகுந்த பாதுகாப்பு அம்சங்களையும் ஏற்படுத்த திட்டமிட்டனர். பாஷ் நிறுவனம், புதிதாக தயாரித்துள்ள நவீன தொழில்நுட்பத்திலான எரிபொருள்'இன்ஜெக்ஷன்' சிஸ்டம் இதில் அறிமுகமாகிறது.இந்த டாடா இன்டிகா 'சூப்பர் மினி' கார், ஜனவரியில் காட்சி பொருளாக இருக்கும். எல்லாருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என ஆவலோடு கார் நிபுணர்கள் காத்திருக்கின்றனர்.டில்லி, பிரகதி மைதானத்தில் 2008 ஜனவரியில் நடக்கும் கண்காட்சியில் இந்த கார் இடம் பெற வேண்டும் என கார் வாங்குவோர் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன், இதே எதிர்பார்ப்பை டாடா இன்டிகா கார் ஏற்படுத்தியது. பிற கார்களை விட அடக்க ஒடுக்கமாக, உள்ளே அதிக இடவசதி உள்ளதாக அறிமுகப்படுத்தப்பட்டது இன்டிகா. அமோக வரவேற்பை ஏற்படுத்திய இந்தக் காரை போன்றே, ஒரு லட்ச ரூபாய் காரும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது.

Indian Banks

ஆசியாவின் 50 சிறந்த வங்கிகளில் 9 இந்திய வங்கிகள்